யாழ். திருநெல்வேலியில் படையினரின் காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்


[ செவ்வாய்க்கிழமை, 06 சனவரி 2009, நிலவன் ]
யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி-கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் முடமாவடி சந்தியில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் காவலரண் மீது நேற்று இரவு 7.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது படையினருக்கு கடும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.